இயக்குனர் பிரபு சாலமனின் கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விக்ரம் பிரபு, அடுத்து நடித்த இவன் வேற மாதிரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்காரதுரை, இது என்ன மாயம், வாகா, சத்ரியன், நெருப்புடா, மற்றும்  புலிக்குட்டி பாண்டி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.மேலும் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபுவின் அடுத்த திரைப்படமாக வெளிவர இருக்கிறது டாணாக்காரன். நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் டாணாக்காரன் திரைப்படத்தை இயக்குனர் தமிழ் எழுதி இயக்கியுள்ளார். பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, P.கோபிநாத் மற்றும் தங்க பிரபாகரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிகை அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்க, நடிகர் லால், M.S.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.இந்நிலையில் தற்போது டாணாக்காரன் படத்தின் டீசர் வெளியானது. ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இந்த டீசரை கீழே உள்ள லிங்கை காணலாம்.