தமிழ் திரையுலகின் சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யா. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார் இத்திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. 

தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் 2 போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் சூர்யா தயாரிப்பாளராகவும் தனது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பல சிறந்த திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

அந்தவகையில் நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகி உள்ள ஜெய்பீம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அசோக்செல்வன் கதாநாயகனாக நடித்த கூட்டத்தில் ஒருவன் திரைப்படத்தை இயக்கிய  THA.SE. ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் S.R.கதிர் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

பிரபல வசனகர்த்தாவும் நடிகருமான மணிகண்டன் மற்றும் கர்ணன் திரைப்படத்தின் நாயகி ராஜிஷா விஜயன் , சிகப்பு மஞ்சள் பச்சை படத்தின் நாயகி லிஜோ ஜோஸ் மோல் மற்றும் பிரகாஷ் ரா‌ஜ்  ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு வெளியான ஜெய்பீம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஜெய்பீம் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் மற்றும் படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.