சிலம்பரசனின் புதிய பட டீசர் ரிலீஸ்!-அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ!
By | Galatta | June 29, 2021 18:28 PM IST

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சிலம்பரசனின் அடுத்த புதிய திரைப்படத்தின் டீசர் வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழும் நடிகை ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக மஹா திரைப்படம் உருவாகியுள்ளது.
இயக்குனர் U.R.ஜமீல் எழுதி இயக்கியுள்ள மஹா திரைப்படத்தை ETCETERA என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் V.மதியழகன் தயாரித்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளரான R.மதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஜிப்ரான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாக நடிக்கும் மஹா திரைப்படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் பிக் பாஸ் புகழ் நடிகை சனம் ஷெட்டி உள்ளிட்ட நடிகர்களுடன் நடிகர் சிலம்பரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முன்னதாக வெளியான இத்திரைப்படத்தின் போஸ்டர்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நிலையில் வெகு நாட்களாக திரைப்படத்தின் டீசர் வெளியீடு பற்றிய பேச்சுகள் சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில் மஹா திரைப்படத்தின் டீசர் வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது. வருகிற ஜூலை 2-ம் தேதி மாலை 6 மணி அளவில் மஹா திரைப்படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ஹன்சிகா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
#maha @malikstreams @ihansika @SilambarasanTR_ @Etceteraenter @ghibranofficial @MathiyalaganV9 @Act_Srikanth@DoneChannel1@murukku_meesaya @dir_URJameel pic.twitter.com/ZkXtdEBngN
— Hansika (@ihansika) June 29, 2021
The much awaited announcement on STR's next film is here - Don't miss!
29/06/2021 05:18 PM
SURPRISE: Gautham Menon and RJ Balaji join hands - Trending Promo Video here!
29/06/2021 04:26 PM