இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற நடன இயக்குனர்களில் ஒருவராக திகழும் பிரபுதேவா, நடன இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் இயக்குனராகவும் மக்களை மகிழ்வித்து வருகிறார்.பிரபுதேவா நடிப்பில் பொன்மாணிக்கவேல் & யங் மங் சங் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ள நிலையில் பஹீரா, ஊமைவிழிகள் & தேள் உள்ளிட்ட திரைப்படங்கள் இறுதிகட்ட பணிகளில் தயாராகி வருகின்றன.

மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்ததாக இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ்.P.ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவா நடித்து வருகிறார்.

மினி ஸ்டூடியோஸ், தயாரிப்பாளர் S.வினோத்குமார் தயாரிப்பில் உருவாகும் பொய்க்கால் குதிரை திரைப்படத்தை இயக்குனர் சந்தோஷ்.P.ஜெயக்குமார் எழுதி இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பல்லு ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.

நடிகர் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்க, நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகைகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்நிலையில் தற்போது பொய்க்கால் குதிரை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஒரு கால் இல்லாத மாற்றுத்திறனாளியாக செயற்கை கால் பொருத்தப்பட்ட நிலையில் ஆக்ரோஷமாக பிரபுதேவா நின்றுகொண்டிருக்கும் இந்த வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மிரட்டலான இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ...