தனது ஒவ்வொரு திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தி வருபவர் நடிகர் கார்த்தி. கதை தேர்வில் மிகவும் சிறந்து செயல்பட்டு வருகிறார். கார்த்தி கைவசம் பொன்னியின் செல்வன் படம் உள்ளது. மணிரத்னம் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. 

கைதி திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்திருக்கும் நிலையில் ரெமோ புகழ் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் சுல்தான் ஏப்ரல் 2-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் கார்த்தி, சமீபத்தில் சென்னை அரசுப்பேருந்தில் தனது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். சென்னை மக்களின் நம்பத்தக்க நண்பன் பல்லவன். என் கல்லூரி நாட்களில் அதிகம் பல்லவன் பேருந்தில் செலவழித்திருத்தேன் என்று கார்த்தி பதிவவிட்டது அதிக லைக்ஸ்களைக் குவித்தது.

அதன் பிறகு தனது குழந்தைப் பருவ புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். குழந்தை பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்த உடை இதுதான். எப்போதெல்லாம் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் பில்லா படத்தின் ‘மை நேம் இஸ் பில்லா ’ பாடல் ஒளிபரப்பாகுமோ அப்போது டெனிம் ஜாக்கெட்டையும், இந்த பேன்டையும் ஸ்டைலாக அணிந்து கொள்வேன் என்று கூறியிருந்தார். 

கடைசியாக சொந்த ஊரில் புளிய மரத்தில் தொங்கியபடி வீடியோவை வெளியிட்டுள்ளார். சிறுவயதிலிருந்தே இதில் தொங்க முயற்சி செய்வதாக குறிப்பிட்டுள்ளார். கார்த்தியின் இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

நடிகர் கார்த்தி கடந்த 2011-ம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2013ம் ஆண்டு உமையாள் என்ற பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் கழித்து கடந்த அக்டோபர் மாதம் கார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தைக்கு ‘கந்தன்’ என்று முருக கடவுளின் பெயரை சூட்டி இருக்கிறார். 

மேலும் சமூக வலைத்தளத்தில் ‘கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக கந்தன் என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும். அன்புடன்... அப்பா...என்று பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.