தமிழ் திரை உலகின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அருள்நிதி இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த வம்சம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் வெளிவந்த மௌனகுரு திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதனையடுத்து டிமான்ட்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், k-13 உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும் படம் டைரி. டைரி படத்தை FIVE STAR கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரித்துள்ளார்.

இயக்குனர் இன்னசி பாண்டியன் எழுதி இயக்கியுள்ள டைரி திரைப்படத்திற்கு ராண் எதான் யோகன் இசையமைத்து இருக்கிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க நடிகை பவித்ரா மாரிமுத்து கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் டைரி திரைப்படத்தின் டீஸர் ரிலீஸ் பற்றிய முக்கிய தகவல் தற்போது வெளியானது. 

வருகிற ஜூலை 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு டைரி திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வித்தியாசமான திரில்லர் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் அருள்நிதியின் அடுத்த திரைப்படமாக உருவாகியிருக்கும் டைரி திரைப்படமும் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.