ராகவா லாரன்ஸ் திரைப்படம் குறித்து பதிவு செய்த நடிகர் அமீர் கான் !
By Sakthi Priyan | Galatta | October 15, 2020 17:39 PM IST

கடந்த 2011-ம் ஆண்டு ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்திருந்த படம் காஞ்சனா. தற்போது லக்ஷ்மி பாம் என்ற பெயரில் இந்தியில் ரீமேக்காகிறது. இதில் அக்ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்க, லாரன்ஸ் இயக்கியுள்ளார். இதில் அக்ஷய் குமார் முதல் முறையாக திருநங்கையாக நடித்துள்ளார். கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார்.
கொரோனா நெருக்கடியால் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் இருப்பதால் இந்தத் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் வெளியிடாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. நவம்பர் 9-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் சேனலில் வெளியாகிறது. லக்ஷ்மி பாம் திரைப்படம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, UAE போன்ற நாடுகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் அக்ஷய் குமார் ரசிகர்கள்.
லக்ஷ்மி பாம் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தை ஈர்த்தது. தமிழில் வெளியானதை போல் காமெடி கலந்த ஹாரர் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்த புடவை கட்டும் காட்சி, முகத்தில் மஞ்சள் பூசுவது போன்ற காட்சிகள் காஞ்சனா படத்தை நினைவு படுத்தும் விதத்தில் உள்ளது.
இந்தப் படத்திற்காக புடவை உடுத்தியது நல்ல அனுபவம் என்று அக்ஷய் குமார் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். புடவை ஒரு நல்ல உடை. எல்லா அளவில் இருப்பவர்களுக்கும் சரியாக இருக்கும். புடவை அணிந்து ஓடும் பேருந்து, ட்ரெய்னில் ஏறும் பெண்களை, தினசரி வேலை செய்யும் பெண்களைப் பார்க்கிறோம். என்னால் புடவையில் நடக்கக்கூட முடியவில்லை. இதை உடுத்திச் சமாளிக்கும் பெண்களுக்கு வாழ்த்துகள். இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நீங்கள் புடவை உடுத்திப் பார்த்தால்தான் தெரியும் என்று அக்ஷய் குமார் பேசியிருந்தார்.
சிறந்த ஆக்ஷன் நடிகராக வளம் வரும் அக்ஷய் குமார் ஆரம்ப காலம் முதலே சிறந்த சமூக ஆர்வலராகவும் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா காலத்திலும் இவர் கோடிக்கணக்கில் அரசுக்கும் பொது மக்களுக்கும் நிதி கொடுத்துள்ளார் என்றால் அது மிகையல்ல. 2018ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் தான் இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் என்றபோது இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊரடங்கிலும் கொரோனா விழிப்புணர்வு குறித்த அரசு விளம்பரங்களில் நடித்தார்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகிஇருக்கும் லக்ஷ்மி பாம் படத்தின் ட்ரைலரை பார்த்து விட்டு பாராட்டி பதிவு செய்துள்ளார் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீர் கான். அவரது பதிவில், லக்ஷ்மி ட்ரைலர் அருமையாக உள்ளது. தியேட்டரில் ரிலீஸாகியிருக்க வேண்டிய திரைப்படம். அக்ஷய் குமாரின் பெர்ஃபார்மன்ஸ் அற்புதம். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார் அமீர் கான். இதனால் ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Dear @akshaykumar, what a superb trailer, my friend. Can't wait to see it. This will be huge! Wish it was releasing in the theatres. And your performance is outstanding! Best wishes to everyone.https://t.co/4Cz0sc9Y94@offl_Lawrence @foxstarhindi @advani_kiara @Shabinaa_Ent
— Aamir Khan (@aamir_khan) October 15, 2020
Bigg Boss 4 Tamil - Unseen Deleted Scene | Rio Raj | Nisha | Velmurugan
15/10/2020 04:21 PM
KGF 2 New Mass Promo Video - Rocky Bhai vs Adheera begins!
15/10/2020 03:21 PM