17 வயது பள்ளி மாணவியை காதல் வலையில் வீழ்த்தி, திருமண ஆசை காட்டி கர்ப்பமாக்கி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் தென்றல் நகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி, தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்த மாணவி, அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது, கொரோனா தொற்று காரணமாக, அந்த மாணவி, தனது பெற்றோருடன் வீட்டில் 
இருந்து வந்தார்.

இந்த சூழலில், மாணவியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த அவர்களது உறவினரான 24 வயதான ஜோதி என்ற இளைஞர், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, தனது உறவினர் பெண்ணான அந்த சிறுமி, துரத்தித் துரத்தி காதலித்து வந்த ஜோதி, ஒரு கட்டத்தில் தனது காதல் வலையில் வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது. 

இப்படியாக, ஜோதியின் காதலில் அந்த பள்ளி மாணவியும் விழுந்துள்ளார். இதனையடுத்து, அவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக, காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், அவர்கள் இருவரும் பக்கத்துப் பக்கத்து வீடு என்பதால், இருவரும் தங்கள் பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியமாகச் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இப்படியாக, காதலியான அந்த 12 ஆம் வகுப்பு மாணவியைத் தனியாகச் சந்தித்து வந்த காதலன் ஜோதி, கடந்த பிப்ரவரி மாதம் மாணவியின் வீட்டிற்குச் சென்று உள்ளார்.

அப்போது, காதலியின் பெற்றோர் வீட்டில் இல்லை என்றும், அவர்கள் வெளியே சென்றிருப்பதால், திரும்பி வர நேரம் ஆகும் என்பதைத் தெரிந்துகொண்டே காதலியின் வீட்டிற்குள் நுழைந்த காதலன் ஜோதி, இந்த தனிமையான சந்தர்ப்பத்தைப்  பயன்படுத்திய, தனது காதலியான அந்த 12 ஆம் வகுப்பு மாணவியிடம் திருமண ஆசை வார்த்தைகள் கூறி, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அத்துடன், “இந்த தனிமையான சந்திப்பு குறித்து வெளியே எதுவும் சொல்ல வேண்டாம்” என்று, காதலன் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, கடந்த வாரம் மாணவிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டு அவர் வலியால் துடித்து உள்ளார். இதனால், பதறிப்போன மாணவியின் பெற்றோர், தங்களது மகளை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.

மருத்துவமனையில் மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், “மாணவி கர்ப்பமாக இருப்பதாக” அவரது பெற்றோரிடம் கூறி உள்ளனர்.

இதனைக்கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், “என்ன நடந்தது? யார் காரணம்?” என்று தங்களது மகளிடம் விசாரித்து உள்ளனர்.

இதனையடுத்து, அந்த 12 ஆம் வகுப்பு சிறுமி, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது மாணவி, “தனது காதல் கதை குறித்தும், கர்ப்பத்திற்குக் காரணமான காதலன் ஜோதி” குறித்தும் கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உறவினரான ஜோதி மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஜோதியைத் தேடி வந்த நிலையில், தற்போது அவரை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.