காவல்துறையில் சப் இன்ஸ்பெக்ட்ராக இருக்கும் விவேக் ரவிராஜனால் தான் ஏமாற்றபட்டதாக, சுபஶ்ரீ என்ற பெண் புகார் சொல்லியிருக்கிறார். பெண்ணுக்கு பிரச்னை என்றால் முன்வந்து உதவ வேண்டிய காவல்துறையை சேர்ந்த நபரொருவரே இப்படி தன்னிடம் தவறாக நடந்துக்கொள்வது, அதிர்ச்சிகரமான விஷயம்னு சொல்லியிருக்காங்க மயிலாடுதுறையை சேர்ந்த சுபஶ்ரீ.

இது தொடர்பாக சுபஶ்ரீ, நமக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருப்பது, ``2017 - 18 ஆண்டில், என்னுடைய கிராமம் இருந்த டிவிஷனில் சப் இன்ஸ்பெக்ட்ரா இருந்தாரு விவேக் ரவிராஜ். ஃபேஸ்புக் மூலமா நல்ல நண்பர்களா அறிமுகம் ஆனோம். மொபைல் நம்பர் வாங்குனது, பேசுனது எல்லாம் அவர்தான். ரொம்ப நேர்மையான ஆளுன்னு நினைச்சுதான் நானும் பேசினேன். ரெண்டு பேருமே, ஒரே சமூகத்தை சேர்ந்தவங்க என்பதால என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக அப்ரோச் பண்ணினாரு. வீட்ல பேச சொல்லி சொல்லிட்டேன்.

ஒருகட்டத்துக்கு மேல, கல்யாணம் பண்ணிக்கிறதா வாக்குறுதியும் தந்தார். அதை நம்பி நானும் அவர்கூட பழகினேன். திருமணத்துக்கு முன்னாடி கர்ப்பம் ஆகிட்டேன். கர்ப்பம் ஆனபிறகு, உடனடியா கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டேன். ஆனா, அதுக்குப்பிறகுதான் அவரோட உண்மையான முகம் தெரிய ஆரம்பிச்சுச்சு.

கர்ப்பத்தை கலைக்க சொல்லி சொல்ல ஆரம்பிச்சாரு. முடியாதுனு சொன்ன பிறகு, ரொம்ப கடினமான வார்த்தைகளோட எங்கிட்ட பேசத்தொடங்கினாரு. நான் செத்துடுவேன்னு சொன்ன பிறகு, கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னாரு. ஆனா அப்பவும், நான் தற்கொலை செஞ்சுகிட்டா, கருவை வைச்சு அவரை கைது பண்ணிடுவாங்கனு நினைச்சு, அதுனாலதான் என்னைய கல்யாணம் செஞ்சிக்கிறதா சொன்னாரு. இப்பவாச்சும் கல்யாணம் செஞ்சுக்க ஒத்துகிட்டாரேனு கொஞ்சம் நிம்மதியானேன். ஆனா அப்பவும், கருவை கலைக்கிறதுக்கான வேலைகளை பார்த்தாரு. கரு ஒருகட்டத்துல கலைஞ்சிடுச்சு. 

நான் மேற்கொண்டு விவேக் ரவிராஜ் மேல கேஸ் கொடுக்க போயிருந்தேன். ஆனா, கேஸ் எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. ஏதேதோ காரணம் சொல்லி, என்னை சமாதானப்படுத்ததான் எல்லாரும் முயற்சி பண்ணாங்க. அவர் எங்கிட்ட பேசுன ஆடியோவெல்லாம் கூட நான் காண்பிச்சேன். ஆனா அதலாம் எடுத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. என்னை அவர் கர்ப்பமாக்கி ஏமாத்திட்டதா சொன்னப்போ, அதுக்கு யாராச்சும் சாட்சிக்கு இருக்காங்களானு ரொம்ப கொச்சையா கேட்டாங்க. எனக்கு என்ன கஷ்டமா போச்சுன்னா, ஒரு பொண்ணு தானே வந்து ஏமாந்திருக்கேன்னு சொன்னா, இப்படித்தான் சாட்சி இருக்கான்னு கேட்பாங்களா? நான்தாங்க பாதிக்கப்பட்டவ.  நானே சொல்றேன், இதைவிட வேறென்ன வேணும் அவங்களுக்குனு தெரில எனக்கு.

எங்க தொகுதியை சேர்ந்த, அதிமுக - பாஜக நபர்களெல்லாம் என்னை சமாதானப்படுத்தும் முயற்சியில ரொம்ப தீவிரமா இருந்தாங்க. பணம் தர்றோம்னு சொல்லி பேசுனாங்க. நான் எதுக்கும் ஒத்துக்கலை. என்னை ஏமாத்தின அந்த விவேக் ரவிராஜூக்கு, தண்டனை வாங்கித்தந்தே ஆகனும்னு இருந்தேன். இதப் பார்த்த அவங்க எல்லாரும், என்மேல பழி போட ஆரம்பிச்சுட்டாங்க. என்னுடைய நடத்தை தான் சரியில்லனு சொல்லி, தகவல் பரப்ப ஆரம்பிச்சுட்டாங்க. என்னுடைய நடத்தை மேல, போலியான புகாரக்ளை காவல் நிலையத்துல பதிவு செஞ்சாங்க. ஆடியோ ஆதாரத்தோட நான் விவேக் ரவிராஜ் மேல கொடுத்த வழக்குகளை எடுத்துக்காத காவல்துறை, ஒரு ஆதாரம் கூட சமர்ப்பிக்கப்படாத என் மீதான வழக்கை, உடனே பதிவு செஞ்சுகிட்டாங்க. கடந்த 15 மாசத்துக்கும் மேல, வழக்குகளோட எதிர்ப்போராட்டத்துல நான் ஈடுபட்டிருக்கேன். 

இப்பவும் சொல்றேன், எனக்கு அந்த விவேக் ரவிராஜ்ஜை திருமணம் செய்து கொள்ள வேண்டாம். எனக்கு அவர் செஞ்ச அநீதிக்கு, அவருக்கு சரியான தண்டனை கிடைக்கணும்" என்று கூறினார்.

பொதுமக்கள், எனக்கு நீதி கேட்கனும் - நீதிக்காக குரல் கொடுக்கனும்னு நான் கேட்டுக்கிறேன். சாத்தான்குளம் பிரச்னை தொடங்கி, இன்னைக்கு நீதி கேட்கப்படும் பல வழக்குகளிலும், சம்பந்தப்பட்டவங்க உயிரிழந்திருக்காங்க. அப்போ, உயிரிழந்தவஙக்ளுக்குத்தான் நீதி கேட்கப்படுமா நம்ம நாட்ல? உயிரோடு இருந்து என்னை போல போராடுபவர்களுக்கு, நீதி கிடைக்காதா? யாரும் குரல் கொடுக்க மாட்டாங்களா? நானும் எத்தனையோ முறை தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கேன். ஆனா வாழனும்னு நினைச்சு, போராட்டங்களோட வாழறேன். என் போராட்டத்தை ஏன் யாரும் கண்டுக்க மாட்றீங்க என்கிறார்.

சுபஶ்ரீ தரப்பில் முன்வைக்கப்பட்ட சில முக்கிய ஆதாரங்களை, கலாட்டா தமிழ் யூட்யூப் சேனலில் காணலாம்.