மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் 21வது நாளாக நடந்து வருகிறது.  இந்நிலையில், ஹரியானா மாநிலம் குருத்வாரா சீக்கிய பாதிரியார் ,65 வயதான  பாபா ராம் சிங். இவர், டெல்லி-சோனிபட் எல்லை குண்ட்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை கலந்து உள்ளார். விவசாய போராட்டத்தில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது. 


 மேலும் தனது தற்கொலை குறித்து முன்னரே அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், "விவசாயிகள் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்த போராடுக்கிறார்கள். அரசாங்கம் அவர்களுக்கு நீதி வழங்க வில்லை. அநீதி ஒரு பாவம் செயல்..அந்த அநீதியைப் பொறுத்துக்கொள்வதும் கூட ஒரு பாவம். விவசாயிகளுக்கு ஆதரவாக, சிலர் தங்கள் விருதுகளை அரசாங்கத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளனர். நான் என் உயிரை தியாகம் செய்ய முடிவு செய்துள்ளேன். என் தியாகம் இதுதான். அரசாங்கத்தின் அநீதிக்கு எதிராக கோபத்தையும் வலியையும் வெளிப்படுத்த எனது உயிரைத் தியாகம் செய்கிறேன். ” என்று அந்த கடித்ததில் குறிப்பிட்டு இருக்கிறார். 


காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ பாபா ராம் சிங் தற்கொலைக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பல விவசாயிகள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். மோடி அரசின் கொடுமைகள் எல்லாம் எல்லைகளையும் தாண்டிவிட்டது. மோடி பிடிவாதமாக இருப்பதை நிறுத்திவிட்டு , வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.