கேரள சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய நாள்தோறும் 5000 பக்தர்களை அனுமதிக்க கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கொரோனா பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய திங்கள் முதல் வெள்ளி வரை 2000 பக்தர்களும் மற்றும்  சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 3000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என்று அறிவித்து இருக்கிறது.


இதேபோல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை 24 மணி நேரத்திற்குள் கொண்டுவர தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையும்  48 மணி நேரமாக உயர்த்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 10 வயது முதல் 60 வயது வரையிலான பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தனி மனித இடைவெளியுடன் தான் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டும் எனவும் சானிடைசர் வைத்திருக்க வேண்டும் போன்ற  கட்டுப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.