ஒரு பெண்ணுடன் ஒரே நேரத்தில் 2 ஆண்கள் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால், கள்ளக் காதலர்கள் இருவரும் மோதிக்கொண்டதில் ஒரு கள்ளக் காதலன் குத்தி கொலை செய்யப்பட்டு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“கள்ளக் காதல் கதைகள் எல்லாம் கொலையில் முடியும் என்பார்கள். அதற்கு, இந்த சரவணனின் கள்ளக் காதல் கதை மட்டும் விதி விலக்கா என்ன?”

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்து உள்ள சருத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தர் தான் 35 வயதான விசாகன் மற்றும் 29 வயதான சரவணன் ஆகிய இளைஞர்கள். 

இதில், விசாகனுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், அடுத்த சில ஆண்டுகளிலேயே அவர் தன் மனைவி உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து உள்ளார். இதன் காரணமாக, விசாகன் தன் மனைவி விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார். 

இதனையடுத்து, சில ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்து வந்த விசாகன், அதன் பிறகு அவருக்கு ஒரு துணை தேவைப்பட்டு உள்ளது. இதனால், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் அவர் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரும், அதே பெண்ணுடன் கள்ளக் காதலில் இணைந்து, அனுதினமும் உல்லாச இன்பத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இதனையடுத்து, ஒரு பெண்ணுடன் இரு ஆண்களும் கள்ளக் காதலில் ஈடுபட்டு வருவது ஒருவரை ஒருவருக்குத் தெரிய வந்துள்ளது. இதனால், அந்த 2 பேரும், சம்மந்தப்பட்ட கள்ளக் காதலியிடம் சென்று சண்டை போட முடியாமல், ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு, பகைத்துக்கொண்டனர்.

முக்கியமாக, அந்த 2 பேரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்குள் எப்போதும் முட்டல் முனங்கல் என்று பகை புகையத் தொடங்கியது. 

அதன் தொடர்ச்சியாக, இருவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாகவும், அவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இப்படியாக ஒருவர் மீது ஒருவருக்க கொலை வெறி ஆத்திரம் மனதிற்குள் இருந்துகொண்டே இருந்து உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தான், நேற்றைய தினம் அப்பகுதியில் உள்ள கறிக்கடை முன்பாக ஒரு கள்ளக் காதலன் சரவணன், அங்கே பேசிக்கொண்டு இருந்து உள்ளார். அப்போது, அங்கு வந்த விசாகன் சரவணன் உடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதில், கள்ளக் காதலர்கள் இருவருக்குள்ளும் வாக்கு வாதம் முற்றவே, கடும் ஆத்திரமடைந்த சரவணன், தான் எப்போதும் மறைத்து வைத்திருக்கும் கத்தியை எடுத்து, தன் கள்ளக் காதலியின் மற்றொரு கள்ளக் காதலன் விசாகனின் மார்பு, முதுகுப் பகுதியில் சரமாரியாகக் குத்தி உள்ளார். 

இதில், வலி தாங்க முடியாமல் விசாகன் கத்தி கூச்சலிட்டு உள்ளார். இதனையடுத்து, சரவணன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதில், கத்தி குத்து பட்டதில் விசாகன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்து உள்ளார். இதனையடுத்து, படுகாயம் அடைந்த விசாகனை அங்கு இருந்தவர்கள் மீட்டு, 

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், “விசாகன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக” தெரிவித்து உள்ளனர்.

மேலும், இது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாகப் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதன் முதல் கட்ட விசாரணையில், இந்த கள்ளக் காதல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால், அப்பகுதியில் அசம்பாவிதம் சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கு மேற்பட்ட காவல் துறையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

அதே நேரத்தில், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சரவணனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.