பெரம்பலூரில் கடன் கேட்டுச் சென்ற இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் அருண் என்ற இளைஞர், அந்த பகுதியில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். 

இந்நிலையில், அதே பகுதியில் இருக்கும் பக்கத்து ஊரைச் சேர்ந்த சுமார் 22 வயதான இளம் பெண் ஒருவர், குடும்ப பிரச்சனை காரணமாக, அருணிடம் கடன் கேட்டுள்ளார். அதற்கு, அருணும் பணம் தருவதாக கூறிவிட்டு, குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு அந்த இளம் பெண்ணை தனியாக வரவழைத்து இருக்கிறார். 

அதன்படி, அந்த குறிப்பிட்ட இடத்திற்கு அந்த இளம் பெண் வந்து நின்ற நிலையில், அங்கு வந்த அருண் “கடன் கொடுப்பதாகக்” கூறி, அந்த இளம் பெண்ணை தன்னுடைய வாகனத்தில் அழைத்துக்கொண்டு சென்று உள்ளார்.

அப்போது, அந்த பகுதியில் உள்ள வேலூர் என்ற பகுதிக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்ற அருண், அங்கு அந்த பெண்ணை மிரட்டியே பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். அதன் பிறகு, “இது பற்றி வெளியே யாரிடமாவது கூறினால், உன்னை கொலை செய்து விடுவேன்” என்றும் அருண் அந்த பெண்ணை பயங்கரமாக மிரட்டிய நிலையில், மீண்டும் அந்த பெண்ணை அழைத்து வந்த இடத்திலேயே இறக்கி விட்டு விட்டு வென்றுவிட்டார்.

இதனால், பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்கார கொடுமை குறித்து தனது வீட்டில் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை அழைத்துக்கொண்டு பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அருணை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

அதே போல், தேனி அருகே வீட்டில் தனியே இருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார்  கைது செய்தனர்.

தேனி அல்லி நகரம் கௌமாரியம்மன் கோயில் குளத்துத் தெருவைச் சேர்ந்த பழனிசாமியின் மகன் 30 வயதான பிரபு, நேற்றைய தினம் தனது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த 16 வயது சிறுமியுடன் விளையாடுவதாகக் கூறி, அந்த சிறுமியை பாலியல் ரீதியாகச் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார்.

அப்போது, வலி தாங்க முடியாமல் அந்த சிறுமி அலறி துடித்து சத்தமாகக் கூச்சலிட்டு உள்ளார். சிறுமியின் கூச்சலிடும் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து சிறுமியிடம் விசாரித்து உள்ளனர். அப்போது, பிரபு அங்கிருந்து ஓட முயன்றுள்ளார். இதனையடுத்து, பிரபுவை துரத்திப் பிடித்த சிறுமியின் உறவினர்கள், தர்ம அடி கொடுத்து, அங்குள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், சிறுமி சார்பாக அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த அல்லிநகரம் போலீசார், பிரபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிரபு தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால், அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.