நித்தியானந்தா சத்தியத்தின் படி வேரறுக்கப்படுவார் என்று, கடத்தப்பட்ட 2 பெண்களின் தயார் சாபம் விடுத்துள்ளார்.

நித்தியானந்தா மீது பாலியல் மற்றும் 2 பெண்களைக் கடத்தியதாகப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு எதிராக 'புளு கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது அவர் தேடப்பட்டு வருகிறார்.

nithyananda female devotees kidnapping

இதனிடையே, நித்தியானந்தா அவ்வப்போது தனது பக்தர்களுக்காக ஆன்லைன் மூலம் சத்சங்கம் நிகழ்ச்சியில் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார். 

அதில், நித்தியானந்தாவின் சீடர்கள் அவரது புகழ் பாடுவதும், பின்பு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்களும் தங்களுடைய பெற்றோர்கள் பற்றி கடுமையாக விமர்சனம் செய்வதும், அதன் பிறகே.. நித்தியானந்தாவின்  சத்சங்கம் நிகழ்த்துவோமாக, அவருடைய நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில், ஜனார்த்தன சர்மாவின் மனைவி, புவனேஸ்வரி கடும் கோபத்துடன், நித்தியானந்தா குறித்து கடுமையாகப் பேசி, அவருக்குச் சாபம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “எங்களுடைய மகள்கள் எங்களுக்கு எதிராக இப்படி அவதூறு பரப்பினால், மகள் என்றுகூடப் பார்க்காமல், மானநஷ்ட வழக்குப் போடுவேன்” என்றும் புவனேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

nithyananda female devotees kidnapping

மேலும், நித்தியானந்தா உலகின் எந்த மூலையில் இருந்தாலும், சத்தியத்தின் படி அவர் வேரறுக்கப்படுவார் என்றும், கடும் ஆத்திரத்தோடு தெரிவித்துள்ளார். இடையில் நித்தியானந்தாவைக் காரி துப்பும் அவர், தன் மகள்களை நினைத்து மனம் உருகி அழவும் செய்துள்ளார்.

இதனிடையே, நித்தியானந்தாவுக்குச் சாபம் கொடுத்துக் கடத்தப்பட்ட 2 பெண் பிள்ளைகளின் தயார் புவனேஸ்வரி வெளியிட்டுள்ள வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.