கள்ளக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கணவனை கொலை செய்த மனைவியின் காதலன் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. 

மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்த ராமநாதன் என்கிற ரஞ்சித் என்பவர், தன் மனைவி ஹேமலதா உடன் வசித்து வந்தார். இருவரும் நன்றாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென்று கணவன் - மனைவி இருவருக்கும் இடையே கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மனைவி ஹேமலதா உடன் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், பழக்கம் ஆகி உள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனையடுத்து, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாச இன்பத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த கள்ளக் காதல் விசயம், எப்படியோ கணவன் ராமநாதனுக்கு தெரிய வந்துள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கணவன் ராமநாதன், தனது மனைவி ஹேமலதாவையும், மனைவியின் கள்ளக் காதலன் மணிகண்டனையும் வன்மையாகக் கண்டித்து உள்ளார். இதனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத கள்ளக் காதலர்கள் இருவரும் தங்களது கள்ளக் காதல் இன்பத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். ஆனால், இந்த விசயமும் தெரிந்த இன்னும் ஆத்திரமடைந்த ராமநாதன், மனைவியையும் கள்ளக் காதலனையும் மீண்டும் மீண்டும் அழைத்து வன்மையாகக் கண்டித்துள்ளார். இதில், கடும் ஆத்திரம் அடைந்த கள்ளக் காதலர்கள் இருவரும் சேர்ந்து, கணவன் ராமநாதனை கொலை செய்ய அதிரடியாகத் திட்டம் தீட்டி உள்ளனர்.

அதன்படி, கடந்த 2015 ஆம் ஆண்டு கள்ளக் காதலன் மணிகண்டனும், அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த அஜ்மீர் கான் மற்றும் வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து திருமங்கலம் ரயில் நிலைய பகுதியில் மறைவாக காத்து இருந்து உள்ளனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ராமநாதன் தனியாக வந்து கொண்டு இருந்து உள்ளார். அப்போது, ராமநாதனை வழி மறித்து நின்ற 3 பேரும், அவரை அங்கேயே உருட்டுக்கட்டையால் கடுமையாகத் தாக்கியதுடன், அவரின் கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்து உள்ளனர். அதன் தொடர்ச்சியாக, ராமநாதனின் உடலை அந்த பகுதியில் ஓடும் ஆற்றில் தூக்கி வீசி உள்ளனர். 

இதனையடுத்து, ராமநாதன் காணவில்லை என்று, அவரது குடும்பத்தினர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாகத் திருமங்கலம் தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், இந்த கள்ளக் காதல் கதை போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து, கள்ளக் காதலன் மணிகண்டன், முருகன், அஜ்மீர்கான், வெங்கடேஷ், 
ஹேமலதா ஆகிய 4 பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 

இந்த வழக்கு மதுரை மாவட்ட 4 வது கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது, இந்த வழக்கில் முழு விசாரணையும் முடிவடைந்த நிலையில், கள்ளக் காதலன் மணிகண்டன், அஜ்மீர்கான், வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் சேர்த்து ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி நாகலட்சுமி அதிரடியாக உத்தரவிட்டார். அதே போல், ராமநாதனின் மனைவி ஹேமலதா மற்றும், முருகன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.