தெலங்கானாவில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபரை காதலித்து கர்ப்பமான மகளை பெற்றோரே கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஜொகுலம்பா காட்வால் மாவட்டத்தில் உள்ள சாந்திநகர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் ஷெட்டி - வீரம்மா தம்பதியினருக்கு 20 வயதில் மகள் இருந்தார்.

Parents kill daughter for love affair caste violence

அந்த இளம் பெண், ஆந்திரா அருகே உள்ள குர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். 

இதனிடையே கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம்  பிறப்பிக்கப்பட்டதால், அந்த பெண் வீடு திரும்பி உள்ளார்.

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு கடந்த 6 ஆம் தேதி திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த பெண்ணின் பெற்றோர்கள், அருகில் உள்ள மருத்தவமனைக்க அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு, அந்த இளம் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கருவுற்று இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த இளம் பெண்ணின் பெற்றோர்கள் இதற்கு யார் காரணம் என்று கேட்டுள்ளனர்.

Parents kill daughter for love affair caste violence

அதற்கு, தன்னுடன் கல்லூரியில் படிக்கும் தன்னுடைய காதலன் பெயரைச் சொல்லியிருக்கிறார். இதனையடுத்து, அந்த மாணவர் எந்த சாதி என்று அவரது பெற்றோர் கேட்க, அவரும் குறிப்பிட்ட சாதி பெயரைச் சொல்லி, வேற சாதி என்று கூறியுள்ளார். 

இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் பெற்றோர்கள், கருவைக் கலைக்கச் சொல்லி மகளிடம் மருத்துவமனையிலேயே சண்டைபோட்டுள்ளனர். ஆனால், அந்த இளம் பெண் கருவைக் கலைக்க முடியாது என்று மருத்துவிட்டதால், மகளை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

வீட்டில் மகள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், 7 ஆம் தேதி காலையில், மகள் என்று பாராமல், அவரது முகத்தில் தலையணை வைத்து அழுத்தி அவரது பெற்றோர்களே பலவந்தமாக கொலை செய்துள்ளனர்.

இதில், அந்த பெண் இறந்துவிடவே, “தங்கள் மகள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக” அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், விரைந்து வந்த போலீசார், இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிராதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதப் பரிசோதனை முடிவில், “அந்த இளம் பெண் மூச்சடைத்து இறந்துவிட்டது தெரியவந்தது” இதனால், சந்தேகமடைந்த போலீசார், அந்த பெண்ணின் பெற்றோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி உள்ளனர். இதில், பெற்றோரே, தங்கள் மகளைக் கொலை செய்தது தெரியவந்தது. 

இதனையடுத்து, அவர்களைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, வேறு சமூகத்தைச் சேர்ந்த நபரை காதலித்து கர்ப்பமான மகளை, பெற்றோரே கொன்ற கொடூர சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.