ஐஐடி மும்பை நடத்திய ஆய்வில், “பாலின சமத்துவத்தில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக” தெரிய வந்துள்ளது.

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பிய மக்கள் அனைவரும், தற்போது வேலைக்காக மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களை நோக்கியே மீண்டும் படையெடுக்க ஆரம்பித்து உள்ளனர்.

மேலும், கிராமப்புறங்களில் உள்ள பல இளைஞர்களும் இந்த கொரோனா காலத்தில் வேலை இழந்து தவித்து வந்த நிலையில், தற்போது பெரும்பாலான இளைஞர்கள் வேலை வாய்ப்புகளுக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களை நோக்கி அதிக அளவில் செல்லத் தொடங்கி விட்டனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், “சென்னை உள்ளிட்ட நகரங்களை நோக்கி செல்வோருக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு உள்ளது? அவர்களது பொருளாதார பங்களிப்பு என்ன? உள்ளிட்ட கேள்விகளை அடிப்படையாக வைத்து சிறந்த நகரங்களின் பட்டியலை ஐஐடி மும்பை ஆராய்ச்சியாளர்கள் தற்போது வெளியிட்டு உள்ளனர்.

இந்த பட்டில், முதல் முறையாகப் பாலின சமத்துவத்தை அடிப்படையாக வைத்து, இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இந்த பட்டியலில் சென்னை முதலிடத்தைப் பிடித்து அசத்தி உள்ளது. 

அத்துடன், பெண்களுக்கான சிறந்த இடமாக சென்னை இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில், பெண்களுக்கான சிறந்த இடமாக பாட்னா 
கடைசி இடத்தை பிடித்து உள்ளது.

மேலும், இந்த ஆய்வில் சுமார் 14 பிரிவுகளில் மும்பை முதல் இடத்தில் உள்ளது. இதற்கு, அடுத்த இடங்களில் டெல்லி, கொல்கத்தா, சென்னை ஆகியவை இடம் பிடித்து உள்ளன.

முக்கியமாக, அடிப்படை வசதிகளில் உள்ள நகரங்களின் பட்டியலில் புனே முதல் இடம் பிடித்து உள்ளது. 

அது போல், பொருளாதார வளர்ச்சியில் மும்பை முதல் இடம் பிடித்து உள்ளது. பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் கொல்கத்தா முதல் இடம் பிடித்து உள்ளன. 

போக்குவரத்து வசதியில் டெல்லி முதல் இடம் பிடித்து உள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மும்பை முதல் இடத்தில் இருக்கின்றன. உள் கட்டமைப்பு வளர்ச்சியில் கொல்கத்தா முதல் இடத்தில் உள்ளது. பெண்களுக்கான பங்களிப்பில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. 

அது போல், கல்வி வளர்ச்சியில் பாட்னா 91 சதவீதத்துடன் முதலிடத்தில் இருப்பதாக, ஐஐடி மும்பை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, சென்னையில் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி இளம் பெண்ணிடம் பணம், நகை பறித்து ஏமாற்றிவிட்டதாகப் பாதிக்கப்பட்ட இளம் பெண் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.