“உன் கர்ப்பத்திற்கு என் கணவர் தான் காரணம்” என்று கூறிய மாமியாரை, ஆத்திரத்தில் கர்ப்பிணி மருமகள் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்தவர் தீபக் என்ற இளைஞருக்கு, கடந்த சில வருடங்களுக்கு முன்பு 29 வயதான நிகிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, கணவன் தீபக் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பணியாற்றி வந்தார்.

இதனால், அகமதாபாத்தில் தனது மனைவி நிகிதா, தீபக்கின் தந்தை ராம் நிவாஸ் மற்றும் தாய் ரேகா ஆகியோர் ஒன்றாக வசித்து வந்தனர்.
 
இப்படி, இவர்கள் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில். மருமகள் நிகிதாவுக்கும், மாமியார் ரேகாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்து உள்ளது. ஆனால், மாமனார் ராம் நிவாஸ் தன் மருமகளுடன் நல்ல புரிதலுடன் இருந்ததாகவும் தெரிகிறது. அத்துடன், மாமியார் - மருமகள் சண்டையை கணவர் கண்டுகொள்ளாத நிலையில், மாமனார் ராம் நிவாஸ் தலையிட்டு அவ்வப்போது சமரசம் செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால், மாமியார் ரேகா அவருடைய கணவன் ராம் நிவாஸ் மீது சற்று கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நேற்று முன் தினம் கணவன் தீபக் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். 

அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாமனார் ராம் நிவாஸ், அங்குள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், 4 மாத கர்ப்பமாக இருந்த மருமகள் நிகிதா, வீட்டில் தனது மாமியாருடன் இருந்து உள்ளார். ஆனால், வழக்கம் போல் மருகமகள் நிகிதாவுக்கும், மாமியார் ரேகாவுக்கும் இடையே மீண்டும் சண்டை வந்துள்ளது. 

அந்த சண்டையில் கோபத்தில் இருந்த மாமியார் ரேகா, 4 மாத கர்ப்பமாக இருந்த நிகிதாவை பார்த்து, “உன் வயிற்றில் வளரும் குழந்தைக்குத் தனது கணவர் தான் காரணம் என்றும், மாமனாருடன் தவறான தொடர்பை நிகிதா வைத்துள்ளார்” என்றும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி சண்டை போட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர்கள் இருவருக்குள்ளும் மீண்டும் சண்டை ஏற்பட்டு உள்ளது. இதில் கடும் ஆத்திரமடைந்த மருமகள் நிகிதா, மாமியார் ரேகாவை வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் சரமாரியாகத் தாக்கி கொலை செய்தார் என்று, கூறப்படுகிறது. 

அதன் பிறகு, மாமியார் உடல் மீது தீ வைத்து எரித்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது. அப்போது, மாமியார் - மருமகள் ஆகிய இருவரின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தீபக்குக்கு போன் செய்து தகவல் கூறி உள்ளனர். 

இது குறித்துப் பதறி அடித்துக்கொண்டு உடனடியாக வீட்டுக்கு ஓடி வந்த தீபக், உள்ளே சென்று பார்த்து உள்ளார். அப்போது, தாய் ரேகா இரத்த வெள்ளத்தில் சடலமாக இறந்து கிடந்தார். அத்துடன், அவர் எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதையும் பார்த்து அவர் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார். 

மேலும், தனது படுக்கையறையில் கடும் போகத்துடன் மனைவி நிகிதா உட்கார்ந்திருந்திருந்துள்ளார். அப்போது, கணவனை பார்த்த நிகிதா, “நான் அந்த கொலையைச் செய்ய வில்லை” என்று, கூறி அழுதுள்ளார். 

இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட வீட்டிற்கு விரைந்து வந்த போலீசார், நிகிதாவை கைது செய்து, விசாரணைக்குக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். 

இதனிடையே, “உன் கர்ப்பத்திற்கு என் கணவர் தான் காரணம்” என கூறிய மாமியாரை, கர்ப்பிணி மருமகள் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.