தாய் கண்முன்னே 15 வயது சிறுமியை 3 மாதமாக பலாத்காரம் செய்த மகன்! அடுத்தடுத்து அதிர்ச்சி..
By Aruvi | Galatta | Jul 20, 2020, 06:11 pm
சென்னையில் வீட்டை விட்டு வெளியேறிய 15 வயது சிறுமியை கடத்தி, கடந்த 3 மாதமாக வீட்டில் அடைத்து வைத்து தன் தாயாரின் கண் முன்னே மகன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்து வந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை அயனாவரம் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர், சற்று மன நலம் பாதிக்கப்பட்ட தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இதனால், நாள்தோறும் பாட்டிக்கும் - சிறுமிக்கும் இடையே சண்டை வந்துள்ளது. பொருத்து பொருத்துப் பார்த்த சிறுமி, பாட்டியின் பேச்சைக் கேட்கப் பிடிக்காமல், ஒரு கட்டத்தில் பாட்டி வீட்டிலிருந்து மார்ச் மாதம் 3 ஆம் தேதி வெளியேறி உள்ளார்.
இதனையடுத்து, சிறுமியை அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர். ஆனால், சிறுமி எங்குத் தேடியும் கிடைக்காத நிலையில், இது குறித்து சிறுமியின் உறவினர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியைத் தேடி வந்தனர்.
இதனை அடுத்து, அந்த சிறுமி எங்கே செல்வது என்று தெரியாமல் சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது, சிறுமியை அந்த வழியாகக் கடந்து சென்ற திருத்தணியைச் சேர்ந்த வெங்கடேசன், சிறுமியை கவனித்துள்ளார். அதன் பிறகு சிறுமியிடம் சென்று பேச்சுக்கொடுத்துள்ளார். அப்போது, பாட்டி வீட்டிலிருந்து சிறுமி ஓடி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, சிறுமிக்கு பிடித்ததை வாங்கி தந்து, “நான் உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறேன்” என்று ஆசை வார்த்தைகள் கூறி, சிறுமியை திருத்தணியில் உள்ள தனது வீட்டிற்கு வெங்கடேசன் அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், வீட்டில் வெங்கடேசனின் தயார் இருந்துள்ளார். அவரது குடும்பம் ரொம்பவும் ஏழ்மையான குடும்பம் என்பதால், வெங்கடேசனின் வருமானத்தை நம்பிதான் அவர்கள் அன்றாடம் சாப்பிட்டு வந்துள்ளனர். வீட்டில் தாயார் இருக்கும் போதே, அந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்த வெங்கடேசன், வீட்டில் உள்ள தனி அறையில் அந்த சிறுமியை அடைத்து வந்து நாள் தோறும் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, தனது மகன் வெங்கடேசை அவரது தயார் எவ்வளவு தடுத்திருக்கிறார். ஆனால், அதைப்பற்றியெல்லாம் துளிகூட கவலைப்படாத வெங்கடேசன், காம வெறியில், வீட்டில் தாய் இருக்கும் போதே, அந்த சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இப்படியாகத் தொடர்ந்து, 3 மாத காலமாக அந்த சிறுமியை வெங்கடேசன், தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். சிறுமியின் துயரத்தை நினைத்து வேதனைப்பட்ட வெங்கடேசனின் தயார் சிறுமிக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என்று எண்ணி உள்ளார். அதற்கான சந்தர்ப்ப சூழலையும் அவர் எதிர் நோக்கி காத்திருந்தார்.
அந்த நேரத்தில், வெங்கடேசன் பணி நிமிர்த்தமாக 20 நாட்களுக்கு ஆந்திராவிற்குச் செல்ல இருந்ததால், வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை, அவரது வீட்டுக்குச் செல்லும் படி கூறி, அவரது தயார் அனுப்பி வைத்துள்ளார். அதன்படி, சிறுமி அங்கிருந்து வீடு பட்டு வெளியே வந்துள்ளார்.
சிறுமிக்கு எங்கே போவது என்று தெரியாமல், அந்த சிறுமி திருத்தணி ரயில்வே ஸ்டேஷனில் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது, ரயில்வே போலீசார் அவரை மீட்டுள்ளனர். பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், சிறுமி கடத்தப்பட்டு 3 மாத காலம் பாலியல் பலாத்காரத்திற்கா ஆளானது தெரிய வந்தது. மேலும், சிறுமியிடம் அவரது பாட்டி பற்றி விசாரணை நடத்தப்பட்டு, சென்னை அயனாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி, சென்னை அயனாவரம் போலீசாரிடம் அந்த சிறுமி ஒப்படைக்கப்பட்ட நிலையில், சிறுமயை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனையடுத்து, ஆந்திராவில் இருந்து வீடு திரும்பிய வெங்கடேசன், சிறுமி வீட்டில் இல்லாததைக் கண்டும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், அடுத்து நடக்கப் போகும் விபரீதத்தையும் அவர் உணர்ந்து, வீட்டிலிருந்து அவர் தப்பித்துத் தலைமறைவானார்.
இதன் தொடர்ச்சியாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் புலனாய்வு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வெங்கடேசனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இது தொடர்பான விசாரணையில், வெங்கடேசன் ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டாவில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற சென்னை போலீசார், அவரை சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
சென்னையில், வெங்கடேசனிடம் நடத்திய விசாரணையில், “சென்னை பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷனில் வழி தெரியாமல் சிறுமி விழித்துக் கொண்டிருந்தாள். அப்போது, நான் சில சாக்லேட் வாங்கி தந்து, என் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன்” என்று கூறியுள்ளான். இதனைத்தொடர்ந்து, அவரிடம் போலீசார்
தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, வீட்டை விட்டு வெளியேறிய 15 வயது சிறுமியைக் கடத்தி, கடந்த 3 மாதமாக வீட்டில் அடைத்து வைத்து தன் தாயாரின் கண் முன்னே மகன் பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.