வரலாற்று சிறப்புமிக்க தனுஷ்கோடி தேவாலயத்தைக் காண்பதற்காக தினந்தோறும் சுற்றுலாபயணிகள் தனுஷ்கோடி வந்துச் செல்கிறார்கள். தனுஷ்கோடியில் முக்கியமான சுற்றுலா தளமாக இந்த தேவாலயம் இருந்து வருகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தனுஷ்கோடி தேவாயலம் புரெவி புயலினால் பெய்த கனமழையினால் தேவாயலத்தின் சுவர் இடிந்து சேதமைடந்து இருக்கிறது.


முன்செச்சரிக்கை நடவடிக்கைகயாக மீனவ மக்கள் 360 பேரை பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் வருவாய் துறையினர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் தீவில், மீனவ மக்கள் 360 பேரை மீட்புக் குழுவினர் மற்றும் வருவாய் துறையினர் தனுஷ்கோடி பாதுகாப்பு மையங்களில் தங்கவைத்தனர்.


ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்குச்  செல்ல தனுஷ்கோடி துறைமுகத்தை ஆங்கிலேய திறந்துவைத்தது. சில தினங்களாக புரெவி புயல் தாக்கத்தால் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.


இதனால் தனுஷ்கோடி பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. தனுஷ்கோடியில் சுங்க நிலையம் ,  ரயில் நிலையம், துறைமுகக் கட்டிடங்கள் உள்ளிட்டவை முழுவதுமாக இடிந்து விழுந்திருக்கிறது.

பவளப்பாறைகள் மற்றும் சுண்ணாம்பு கற்களைக் கொண்டு கட்டப்பட்ட தேவலாயம் மட்டும் இடிபாடுகளுடன் தப்பித்திருக்கிறது. தனுஷ்கோடியில் புயலில் மிஞ்சியுள்ள கட்டிடங்களை பாதுகாக்க விரைந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோடி தனுஷ்கோடி மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.