கோயில் பூசாரியின் பாலியல் கொடுமைகளை எல்லாம் கடந்த 5 ஆண்டுகளாக பொறுத்துக்கொண்ட சிறுமி ஒருவர், தற்போது பொங்கி எழுந்து காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் அவரையே திருமணம் செய்து கொடுமை செய்த கோயில் பூசாரியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை குன்றத்தூர் அடுத்து உள்ள நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த குமரன் என்பவர், அதே பகுதியில் இருக்கும் அம்மன் கோயில் ஒன்றில் பூசாரியாகவும் இருந்து வருகிறார். 

பூசாரியாகவும் இருக்கும் குமரன், கடந்த 2015 ஆம் ஆண்டு தமது அண்ணன் மனைவியின், தங்கையான 15 வயது சிறுமியை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பலவந்தமாகச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். 

அத்துடன், “இந்த பாலியல் கொடுமையை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது” என்றும், அவன் சிறுமியை கடுமையாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தை வெளியே தெரியாமல் அதனை மறைக்கும் வகையில், குமரனின் குடும்பத்தினர், அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி அவருக்கே அப்போது திருமணமும் செய்து வைத்து உள்ளனர்.

சிறுமியை திருமணம் செய்துகொண்ட கோயில் பூசாரி குமரன், அந்த சிறுமியுடன் தனியாக வீடு ஒன்றை வாடைக்கு எடுத்து வசித்து வந்த நிலையில், அந்த சிறுமியை தினந்தோறும் பூசாரி குமரன் பாலியல் பலாத்காரம் செய்து, தனது இச்சைகளை எல்லாம் தீர்த்து வந்தான் என்றும் கூறப்படுகிறது.

குமரனின் இந்த பாலியல் கொடூரங்களைத் தாங்க முடியாமல் நாள்தோறும் தவித்து வந்த அந்த சிறுமி, தமது அக்காவின் வாழ்க்கையை நினைத்து கடந்த 5 ஆண்டுகளாக மிகவும் பொறுமையாக இருந்து வந்திருக்கிறார்.

எனினும், கணவன் என்ற பெயரில், அந்த சிறுமியை குமரன் அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், கணவன் குமரன், அந்த சிறுமியை வீட்டை விட்டு அடித்து வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, கோயில் பூசாரி குமரன், வேறு ஒரு திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படியாக, 5 ஆண்டுகளாக குமரனின் கொடுமைகளை சமாளித்து வந்த சிறுமி, தற்போது 20 வயதை எட்டிய நிலையில், சாமியாரின் பாலியல் கொடூரங்கள் குறித்து சென்னை பூவிருந்தவல்லி மகளிர் காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்து உள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சாமியார் குமரனை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமி அளித்த புகார் அனைத்தும் உண்மையே என்று தெரிய வந்தது. இதனையடுத்து, சிறுமியை கட்டாய திருமணம் செய்து வைத்த குமரனின் குடும்பத்தினர் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.