காதலர்கள் கணவன் - மனைவி போல் நெருங்கிப் பழகி வந்த நிலையில், காதலரான ஐடி ஊழியர் திடீரென காதலை துண்டித்துக்கொண்டதால், அதிரடியாக  கைது செய்யப்பட்டார். 

சென்னை அரும்பாக்கம் பாலவிநாயகர் நகரைச் சேர்ந்த 24 வயதான ஸ்ரீராம், நாவலூரிலுள்ள ஐ.டி. நிறுவனம் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண்ணும் பணியாற்றி வருகிறார். 

இப்படிப்பட்ட சூழலில், இளைஞர் ஸ்ரீராமும், அந்த 22 வயது இளம் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து உள்ளனர். இப்படியாக, இவர்களது காதல் வாழ்க்கை கலர்புல்லா சென்றுகொண்டிருந்தது.

இந்த நிலையில் தான், காதலன் ஸ்ரீராமின் தாயாருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. இதனால், தனது தயாரைக் கவனித்துக் கொள்ள தனது காதலியின் உதவியை நாடி உள்ளார் காதலன் ஸ்ரீராம். அதாவது தனது வீட்டில் வந்து தங்கியிருந்து தனது அம்மாவை பார்த்துக்கொள்ளும் படி, தனது காதலியை காதலன் ஸ்ரீராம் உதவிக்கு அழைத்து உள்ளார். காதலன் ஸ்ரீராமின் அழைப்பை ஏற்று, கடந்த மார்ச் மாதம் முதல் ஒட்டுமொத்தமாக 3 மாதங்கள் காதலரின் வீட்டில் தங்கியிருந்து, அவரின் தாயாரை அந்த காதலி கவனித்து வந்துள்ளார். 

அப்போது, அந்த வீட்டிலேயே காதலன் ஸ்ரீராமும் இருந்ததால், காதலர்கள் இருவரும் கிட்டத்தட்ட கணவன் - மனைவி போல் மிகவும் நெருங்கி பழகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படியாக, காதலர்கள் அந்த வீட்டில் தொடர்ந்து 3 மாத காலம் கணவன் - மனைவி போல் நெருங்கியே பழகி வந்தனர்.

இதனையடுத்து, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்து வசதிகள் எல்லாம் மீண்டும் வந்தபோது, அந்த இளம் பெண்ணும் தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

இதனையடுத்து, சமீபத்தில் “என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு” தனது காதலரிடம் அந்த இளம் பெண் கேட்டுள்ளார். ஆனால், இதனை ஏற்க மறுத்த காதலன், திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்ததோடு, அவருடனான காதலை துண்டித்துக் கொண்டதாகத் தெரிகிறது.

ஆனால், இது தொடர்பாக அந்த இளம் பெண் விளக்கம் கேட்க முயன்றுள்ளார். ஆனால், அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. 

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டது அறிந்த அந்த பெண், சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், “தன்னை காதலித்து நெருக்கமாக இருந்து விட்டு, தற்போது ஏமாற்றிவிட்டதாகக் காதலன் மீது புகார்” அந்த பெண் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல் துறையினர், இளம் பெண்ணை ஏமாற்றியதாக காதலர் ஸ்ரீராமை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இரு தரப்பினரையும் அழைத்துப் பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, காதலர்கள் 3 மாத காலம் கணவன் - மனைவி போல் நெருங்கி பழகி வந்த நிலையில், காதலரான ஐடி ஊழியர் திடீரென காதலை துண்டித்துக்கொண்டதால், ஏமாற்றம் அடைந்த இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காதலனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.