“நீ வேணா உன் சட்டையை கழட்டிட்டு வாண்ணே” என்று, போலீஸ்காரரை ஒத்தைக்கு ஒத்த சண்டைக்கு அழைத்த ரவுடி மீது 2 வழங்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதுரையில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
 
மதுரை பகுதியில், சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் புதிய ஆடியோ ஒன்று வைரலாகி வந்தது. அந்த ஆடியோவில், போலீஸ் ஒருவரை மற்றொருவர் சண்டைக்கு அழைப்பது போல அந்த ஆடியோ பதிவாகி இருந்தது. 

இது குறித்து மதுரை மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தியதில், “மதுரை தனிப்படை தலைமைக் காவலர் செந்திலை, பந்தல் குடியை சேர்ந்த ரவுடி ராஜேஷ், 'நீ உன் சட்டையை கழட்டிட்டு சண்டைக்கு வா' என்று அழைத்திருக்கிறார்.

அத்துடன், வெளியான அந்த ஆடியோவில், “என் கை, கால்களை உடைக்க வேண்டும் என சொன்னயாமே, நீ எங்கே இருக்கேனு சொல்லு. நான் வாரேன், நீ காக்கி சட்டையை கழட்டி வச்சுட்டு ஆம்பளையா வா, சண்டை போடுவோம், நான் வீரன்” என்றும், அவர் குறிப்பிட்ட செந்தில் என்னும் போலீஸ்கே சவால் விடுத்திருக்கிறார்.

மேலும், “இன்னும் 3 நாளில் நான் பீபிகுளத்தில ஒருவனை கொன்றுவிடுவேன், நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்” என்றும், அந்த ஆடியோவில் அந்த ரவுடி பேசியிருக்கிறார்.

செல்போனில் ரவுடி ராஜேஷ் இப்படி அடாவடியாகப் பேசியது, மதுரை பகுதியில் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலானது.

அப்போது, அந்த ரவுடியை ஏட்டு செந்தில் கண்டித்து உள்ளார். இதனால், சற்றும் யோசிக்காத அந்த ரவுடி, “சரிண்ணே, மன்னிச்சுடு. என்னை சுட்டுக்கொல்லுங்க. உயிரையே வெறுத்துவிட்டேன்” என்று, திடீரென்று தனது மிரட்டலில் இருந்து பின்வாங்கி மன்னிப்புக் கேட்டும் உள்ளார்.

இந்த நிலையில் தான், இந்த ஆடியோ பெரும் வைரலான நிலையில், இது குறித்து மிரட்டப்பட்ட செந்திலிடம், காவல் துறையின் உயர் அதிகாரிகள் விசாரித்து உள்ளனர்.

பின்னர், ரவுடி ராஜேஷ்சை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிடப்பட்ட நிலையில், ரவுடி ராஜேஷ் இருக்கும் இடம் குறித்து, தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். 

என்னும், ரவுடி ராஜேஷ், தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் ரவுடி ராஜேஷ் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதனிடையே, ரவுடி ராஜேஷ் மீது ஏற்கெனவே கொலை, கொள்ளை மற்றும் போக்சோ என மொத்தம் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.