தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஆதி  மிருகம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவான ஈரம் மற்றும் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான அரவான் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் ஆதி கடைசியாக நடித்த மரகத நாணயம் மற்றும் தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளிலும் சமந்தா கதாநாயகியாக நடித்து வெளிவந்த யூ-டர்ன் ஆகிய  படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக கிளாப் என்னும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் நடிகை ஆகாங்க்ஷா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் பிரகாஷ் ராஜ் மற்றும் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கிளாப் திரைப்படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் I.B.கார்த்திகேயன் உடன் இணைந்து ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் & சர்வானந்த் ராம் சினிமாஸ் தயாரிப்பாளர்கள் P.பிரபா, பிரேம், மனோஜ் மற்றும் ஹர்ஷா உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் கிளாப் திரைப்படத்தை இயக்குனர் பிரித்வி ஆதித்யா எழுதி இயக்கியுள்ளார். 

இந்நிலையில் கிளப் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. தடகள விளையாட்டை மையப்படுத்தி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியிருக்கும் ஸ்போர்ட்ஸ் திரைப்படமான கிளாப் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிரடியான அந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.