திரையுலகில் சின்ன கலைவாணராக திகழ்பவர் நடிகர் விவேக். 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான விவேக், சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் மக்களுக்கும் சமூகத்திற்கும் நன்மை செய்யும் பல விஷயங்களை செய்து வருகிறார். குறிப்பாக அவர் மரம் நடுவதை பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறார். 

மரம் நடுங்கள், சுற்றுச் சூழலை காப்பாற்றுங்கள் என்று தான் அவர் சமூக வலைத்தளங்களில் மற்றும் மேடைகளில் தொடர்ந்து அவர் இளைஞர்களுக்கு அட்வைஸ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விவேக் கடைசியாக தாராள பிரபு படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த இந்த படம் பிரபல ஹிந்தி படமான விக்கி டோனார் படத்தின் தமிழ் ரீமேக்காகும். தான்யா ஹோப் நாயகியாக நடித்திருந்தார்.

கொரோனா நேரத்தில் மக்கள் மாஸ்க் அணியும் விதம் குறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் விவேக். உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்க பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்தியன் 2 மற்றும் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார் விவேக். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன், இந்த படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விவேக் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதாவது யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளி வந்த ரவுடி பேபி பாடலை பியானோவில் வாசித்து வாழ்த்து கூறியுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி நடிப்பில் வெளியான படம் மாரி 2. யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. ரவுடி பேபி பாடலுக்கு நடிகர் தனுஷும் நடிகை சாய் பல்லவியும் போட்டி போட்டு ஆடியிருப்பார்கள். இந்தப் பாடல் பல மில்லியன் வியூஸ்களை குவித்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.