கடந்த 2017- ம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் புரட்சி தளபதி விஷால் நடிப்பில் வெளியான படம் துப்பறிவாளன். இப்படத்திற்கு அரோல் கோரலி இசையமைத்திருந்தார். புகழ் பெற்ற ஷெர்லாக் ஹோம்ஸ் சீரிஸ் பாணியில் உருவான இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

mysskin

VFF விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக விஷால் தயாரித்திருந்தார். இந்த படத்தில் பிரசன்னா, அனு இமாணுவேல், ஆண்ட்ரியா, பாக்யராஜ், வினய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதனை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் துப்பறிவாளன் 2 என்ற பெயரில் தற்போது உருவாகி வந்தது. இதற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசை பணிகளை மேற்கொண்டு வந்தார். 

vishal mysskin

இந்நிலையில் துப்பறிவாளன்-2 படத்திலிருந்து மிஷ்கின் வெளியேறியதாக கூறப்படுகிறது. துப்பறிவாளன்-2 படத்தின் படப்பிடிப்பு லண்டனில் சில நாட்கள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து படத்தின் பட்ஜெட் விஷயத்தில் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படத்தில் இருந்து மிஷ்கின் விலகியதாகவும், மீதம் இருக்கும் படப்பிடிப்பை விஷாலே இயக்கவுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது. திரை வட்டாரத்தில் பலரையும் இச்செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.