ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே விஜய் தொலைக்காட்சி தான் என்று சொல்லுமளவுக்கு பல வெரைட்டியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கொடுத்து மக்களை மகிழ்வித்து வருகிறது விஜய் தொலைக்காட்சி. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.

உலக அளவில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பிரதர் நிகழ்ச்சியின் மற்றொரு வெர்ஷன் இந்த பிக் பாஸ்.  இந்தியாவில் முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஏழு மொழிகளில்  ஒளிபரப்பாகிறது.

தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் . கடந்த நான்கு வருடங்களாக நான்கு சீசன்கள் இதுவரை தமிழில் நடைபெற்றுள்ளன. அவற்றில் நடிகர் ஆரவ், நடிகை ரித்விகா, பாடகர் நடிகர் முகென் ராவ் மற்றும் நடிகர் ஆரி அர்ஜுனன் உள்ளிட்டோர் இதுவரை வெற்றி பெற்றுள்ளனர். 15 போட்டியாளர்கள் 100 நாட்கள் பரபரப்பாக நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 5 விரைவில் தொடங்குகிறது.

தமிழகத்தில் சூப்பர்ஹிட் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 முதல் கட்ட பணிகள் போட்டோ ஷூட் உடன் தொடங்கப்பட்டுள்ளதாக தற்போது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 5 குறித்த  அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.