தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இரண்டு படங்களுமே விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் டான் படத்தினை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராம்,ட்விட்டர் உள்ளிட்டவற்றில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவார் சிவகார்த்திகேயன்.தற்போது தமிழ் சினிமாவின் லெஜண்டரி காமெடியன்களில் ஒருவரான கவுண்டமணியை சந்தித்துள்ளார்.இது குறித்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.