தமிழ் திரையுலகில் ஆரம்ப கட்டத்தில் கூட்டத்தோடு நிற்கும் சாதாரண நடிகராக பயணத்தை தொடங்கிய விஜய்சேதுபதி இன்று தமிழ்சினிமா ரசிகர்களின் ஆதர்ஷ கதாநாயகனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியாக கொண்டாடப்படுகிறார். விதவிதமான கதாபாத்திரங்கள் புது புது கதைக் களங்கள் என தேர்ந்தெடுத்து மக்களுக்கு வெரைட்டிகளை வாரி வழங்கி வருகிறார்.

மாநகரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாராகும் மும்பை கார்,மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் புதிய திரைப்படம், நடிகை அதிதி ராவ் ஹைதாரி உடன் இணைந்து காந்தி டாக்ஸ் எனும் மௌன திரைப்படம் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். செவன் க்ரீன் ஸ்டூடியோ சார்பில் தயாரிப்பாளர் S.S. லலித் குமார் தயாரிப்பில், இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் தயாராகும் துக்ளக் தர்பார் படத்தில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், காயத்ரி, கருணாகரன் உள்ளிட்டோருடன் இணைந்து நடிகர் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் பாடல்கள் வெளியானது. “அரசியல் கேடி”, “திராவிடக் கோன்”, “காமி காமி”, “அண்ணாத்த சேதி” என நான்கு பாடல்கள் அடங்கிய ஜூக் பாக்ஸ் வெளியானது.தொடர்ந்து “காமி காமி” ரொமான்டிக் பாடலின் லிரிக்கல் வீடியோவும் வெளியானது. அந்த அழகான பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.