தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது இந்திய சினிமாவின் இன்றியமையாத நடிகராக வளர்ந்து வருகிறார். தமிழ் மொழியை தாண்டி தற்போது ஹிந்தி மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
 
தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாராகும் மும்பை கார் படத்தில் தமிழில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் மேலும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி உடன் இணைந்து காந்தி டாக்ஸ் எனும் மௌன திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் புதிய திரைப்படம் என நடித்து வரும் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் துக்ளக் தர்பார்.

துக்ளக் தர்பார் படத்தில் நடிகர் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், காயத்ரி, கருணாகரன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். செவன் க்ரீன் ஸ்டூடியோ சார்பில் தயாரிப்பாளர் S.S. லலித் குமார் தயாரிப்பில், இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் தயாராகும் துக்ளக் தர்பார் திரைப்படத்திற்கு பிரபல இயக்குனர் பாலாஜி தரணிதரன் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். 

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது துக்ளக் தர்பார் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ளது. “அரசியல் கேடி”, “திராவிடக் கோன்”, “காமி காமி”, “அண்ணாத்த சேதி” என நான்கு பாடல்கள் அடங்கிய ஜூக் பாக்ஸ் தற்போது வெளியாகியுள்ளது. அசத்தலான அந்த பாடல்களை கீழே உள்ள லிங்கை காணலாம்.