கடந்த 2013-ம் ஆண்டு வெளியான சிங் சாப் தி கிரேட் திரைப்படம் மூலம் ஹிந்தி திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி ரௌடேலா. சனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில், ஹேட் ஸ்டோரி 4, பாகல்பண்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். கிளாமரான நடிப்பால் உலகளவில் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். தற்போது விர்ஜின் பானுப்ரியா எனும் படத்தில் நடித்துள்ளார். 

Urvashi Rautela Enjoying Cleopatra Milk Bath

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இப்போதுள்ள ஊரடங்கில் பல்வேறு செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் திரையுலக பிரபலங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதனையடுத்து பிரபலங்கள் டிக்டாக் செய்வது, டான்ஸ் வீடியோ, லைவ் சாட்டில் ரசிகர்களோடு உரையாடுவது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். 

Urvashi Rautela Enjoying Cleopatra Milk Bath

இந்நிலையில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடேலா நீருக்கு பதிலாக பாலில் குளிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிக லைக்குகளை குவித்து வந்தாலும், குடிக்கவே தண்ணியில்லை.. பால் குளியல் எதற்கு என்ற நியாயமான கமெண்ட்டை எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.