வெயில், அங்காடித் தெரு, அரவாண், காவியத்தலைவன் போன்ற தரமான படங்களை தந்தவர் இயக்குனர் வசந்த பாலன். தற்போது ஜிவி பிரகாஷ் வைத்து ஜெயில் எனும் படத்தை இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக அபர்நிதி நடித்துள்ளார். ராதிகா, ரோபோ ஷங்கர், யோகிபாபு போன்றோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். 

GV Prakash Jail First Single Kaathodu Song Promo

கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் நிறைவடைந்தது. தற்போது இப்படத்தின் முதல் பாடலான காத்தோடு காத்தானேன் ப்ரோமோ வெளியானது. தனுஷ் மற்றும் அதிதி ராவ் பாடிய இந்த பாடல் வரிகளை கபிலன் எழுதியுள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி நிறுவனம், இந்த ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.

GV Prakash Jail First Single Kaathodu Song Promo

தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் கூட்டணி இணைந்தால் நிச்சயம் வெற்றி தான் என்பதற்கு இந்த பாடலும் ஓர் எடுத்துக்காட்டு. இன்று ஜிவி பிரகாஷின் பிறந்தநாள் என்பதால் இந்த பாடல் ப்ரோமோவை வெளியிட்டு அசத்தியுள்ளனர் படக்குழுவினர். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் ஜிவி ரசிகர்கள்.