தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் த்ரிஷா. அறிமுக இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் பரமபதம் விளையாட்டு எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. த்ரிஷாவின் 60-வது படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. 

paramapadhamvilayattu

பொலிடிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், அம்மா பொண்ணுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. த்ரிஷாவுடன் ரிச்சர்டு மற்றும் நந்தா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

trisha

இம்மாதம் பிப்ரவரி 28-ம் தேதி திரைக்கு வரவுள்ளது இப்படம். முதல் முதலாக பொலிடிக்கல் திரில்லர் நடிக்கிறேன். அடர்ந்த காட்டிற்குள் சில காட்சிகளை எடுத்ததாக த்ரிஷா கூறியுள்ளார். நிச்சயம் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் இப்படம் அமையும் என்று பதிவு செய்துள்ளார்.