தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்.இவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் வசூல் சாதனை புரிந்து அந்த ஆண்டின் பெரிய லாபம் ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றது.இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்து திரையரங்குகள் சகஜ நிலைக்கு திருப்பியதும் மாஸ்டர் படத்தினை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.கொரோனா தடுப்பு பணிகளில் விஜய் ரசிகர்கள் தொடக்கத்தில் இருந்து தங்கள் பங்கை சிறப்பாக செய்து வருகின்றனர்.

தனது ரசிகர்களால் செல்லமாக தளபதி என்று அழைக்கப்படும் இவர் தனது 46ஆவது பிறந்தநாளை கடந்த ஜூன் 22ஆம் தேதி கொண்டாடினார்.இவருக்கு உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடமிருந்தும்,பிரபலன்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் வந்தன.தற்போது நிலவி வரும் கொரோனா காரணமாக தனது பிறந்தநாளை பெரிதாக கொண்டாடவேண்டும் என்று விஜய் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இருந்தாலும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பல உதவி திட்டங்களை விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் செய்து வந்தனர்.இதில் முக்கியமாக கொரோனா தடுப்பு பணிக்காக ஏராளமான உதவிகளை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் செய்துள்ளனர்.அதில் ஒரு பகுதியாக திருநெல்வேலி விஜய் மக்கள் இயக்கத்தினர் சாலை தடுப்புகளை போலீசாருக்கு வழங்கியுள்ளனர்.இது குறித்து திருநெல்வேலி மாவட்ட துணை காவல் ஆணையர் , அர்ஜுன் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவர் கூறியுள்ளதாவது , திரு விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு (ஜூன் 22) நெல்லை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்காக பேரிகார்டுகளை வழங்கிய நெல்லை மாவட்ட தலைமை இணையதள விஜய் மக்கள் இயக்கத்திற்கு மனமார்ந்த நன்றி.உங்கள் சமூக பார்வை தொடரட்டும் . மற்றவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளீர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.விஜய் ரசிகர்களின் இந்த தொடர் பணிகள் பலரிடமும் பாராட்டை பெற்று வருகின்றன.