சென்னை திரும்பிய தளபதி விஜய் ! தளபதி 65 குறித்த சூப்பர் அப்டேட்
By Aravind Selvam | Galatta | April 25, 2021 11:19 AM IST
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது படங்கள் வெளியானாலே திரையரங்கங்கள் திருவிழாவாக காட்சியளிக்கும்.இவரது பிகில் படம் கடந்த 2019 தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.பொங்கலை முன்னிட்டு இந்த படம் இன்று மிக பிரம்மாண்டமாக கொரோனவை அடுத்து முதல் பெரிய படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..
இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு Gerogia-வில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.15 நாட்களுக்கு மேல் நடைபெற்று வந்த இந்த ஷூட்டிங் நிறைவடைந்து படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர்.தளபதி விஜய் சென்னை ஏர்போர்ட்டிற்கு வரும் வீடியோ வெளியாகி செம வைரலாகி வருகிறது.இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
EXCLUSIVE VIDEO: Thalapathy VIJAY arrived in Chennai after shooting for #Thalapathy65 in Georgia. #Vijay65 @actorvijay @Vijay65TheFilm pic.twitter.com/0TiIvaVCKn
— #Thalapathy65 (@Vijay65TheFilm) April 25, 2021
Actress Raiza Skin Treatment Controversy: Raiza issues big statement! Check Out!
24/04/2021 06:00 PM
Cook with Comali star Sivaangi shares an important life update - gets emotional!
24/04/2021 05:07 PM