தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா.இவர் நடிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.சுதா கொங்கரா இந்த படத்தை இயக்கியுள்ளார்.ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

சூர்யாவிற்கு பெண்கள் மற்றும் பேமிலி ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.சூர்யாவின் சூப்பர்ஹிட் படங்களில் ஒன்று சிங்கம்.இயக்குனர் ஹரி சூர்யா கூட்டணியில் உருவான இந்த படம் பெரிய கமர்சியல் வெற்றியை பெற்றது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்கள் உருவாக்கப்பட்டன.இவையும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து சூர்யா தனது அடுத்த படத்தில் ஹரியுடன் இணைகிறார்.அருவா என்று பெயரிடப்பட்டிருந்த இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருந்தது,கொரோனா காரணமாக இந்த ஷூட்டிங் தள்ளிப்போயுள்ளது.

சூர்யா ஹரியின் வெற்றி கூட்டணியில் உருவான படம் சிங்கம் 3.அனுஷ்கா,நாசர்,ராதாரவி என்று முதல் இரண்டு பாகங்களில் பட்டையை கிளப்பிய அனைத்து நட்சத்திரங்களும் இருந்தனர்.இவர்களுடன் ஸ்ருதிஹாசன்,சூரி,ரோபோ ஷங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்களும் சேர்ந்துகொள்ள படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி சன் டிவியில் சண்டே ப்ரைம் ஸ்லாட் மாலை 6.30க்கு ஒளிபரப்பானது.குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் கவரும் வண்ணம் இருந்த இந்த படம் அந்த வாரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது , இந்த தகவலை BARC நிறுவனம் வெளியிட்டுள்ளது.இந்த செய்தி வெளியானதை அடுத்து சூர்யா ரசிகர்கள் இதனை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Suriya Singam 3 Movie Tops TRP Rating By BARC