காப்பான் படத்தை தொடர்ந்து சூர்யா இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Suriya 39 Titled Aruva Directed By Hari D Imman

இந்த படம் கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள சூர்யா 40 படத்தில் நடிக்கவுள்ளார்.ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாகவுள்ள சூர்யா 39 குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Suriya 39 Titled Aruva Directed By Hari D Imman

இந்த படத்தை ஹரி இயக்குவார் என்றும் இந்த படத்திற்கு அருவா என்று பெயரிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இமான் இசையமைக்கும் இந்த படம் ஏப்ரல் மாதம் ஷூட்டிங் தொடங்கி ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடந்து முடியவுள்ளது.படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆறு,வேல்,சிங்கம்,சிங்கம் 2,சி 3 படங்களை தொடர்ந்து இயக்குனர் கறியுடன் சூர்யா ஆறாவது முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.