வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து STR 45 படத்திலும் நடித்து வந்தார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

STR Maanaadu Shooting Details Suresh Kamatchi

இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.எஸ்.ஏ.சந்திரசேகர்,பாரதிராஜா,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.யுவன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

STR Maanaadu Shooting Details Suresh Kamatchi

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சென்னையில் நடந்து வரும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த சுரேஷ் காமாட்சி ஷூட்டிங் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக STR புகைப்படத்துடன் ஒரு பதிவிட்டுள்ளார்.இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.