தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் இணைந்து ஹீரோ படத்தில் பணியாற்றி வருகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Sivakarthikeyan PS Mithran Hero Telugu Remake KJR

KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Sivakarthikeyan PS Mithran Hero Telugu Remake KJR

இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வரும்நிலையில் ,இந்த படத்தினை தெலுங்கில் முன்னணி நடிகரை வைத்து ரீமேக் செய்ய KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.இன்னும் படம் திரைக்கு வராத நிலையில் இந்த படத்தை ரீமேக் செய்ய திட்டமிடுவது படக்குழுவினருக்கு கதையின் மீதுள்ள நம்பிக்கையை காட்டுகிறது.

Sivakarthikeyan PS Mithran Hero Telugu Remake KJR