ஆரி நடிப்பில் உருவாகி வரும் படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்கியுள்ளார்.சாஷ்வி பாலா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Ellam Mela Irukavan paathupan Aari

Ellam Mela Irukavan paathupan Aari

கார்த்திக் ஆச்சார்யா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக லக்ஷ்மனும்,படத்தொகுப்பாளராக கெளதம் ரவிச்சந்திரனும் பணிபுரிகின்றனர்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Ellam Mela Irukavan paathupan Aari

Ellam Mela Irukavan paathupan Aari

இந்த படத்தின் டைட்டில் பாடலான எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் என்ற பாடலின் லிரிக் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.ஒத்த சொல்லல,வேணாம் மச்சான் வேணாம் உள்ளிட்ட பாடல்களை பாடிய வேல்முருகன் இந்த பாடலை பாடியுள்ளார்