கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. நோய் வேகமாக பரவாமல் காத்துக்கொள்ளவும் இந்த நடிவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது. இதுகுறித்து திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 

Shanthanu

நடிகர் அருண் விஜய், தனது வீட்டின் மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை நேற்று ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். பல பிரபலங்கள் இந்த 21 நாட்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள், எந்த படத்தை பார்க்கிறார்கள் என்பது குறித்தும் பகிர்ந்து வருகின்றனர். 

shanthanu

தற்போது நடிகர் ஷாந்தனு, வீட்டிலிருந்தே உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். கையில் வாட்டர் பாட்டில்கள் கொண்டு உடற்பயிற்சி செய்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த மாஸ்டர் பிரபலம் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. லிப்ரா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகை அதுல்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார் ஷாந்தனு.