கடந்த 2007-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெங்கடேஷ் நடித்து வெளியான திரைப்படம் ஆடவரி மாட்டலேகு அர்த்தாலே வேறுலே. தெலுங்கில் வெளியான இப்படத்தில் வெங்கடேஷிற்கு ஜோடியாக த்ரிஷா நடித்தார். 

Venkatesh

தற்போது இந்த படத்தின் காட்சியை காட்சியை ட்விட்டரில் பகிர்ந்த வெங்கடேஷ், இப்படம் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியதாக அமைந்தது. குறிப்பாக எனக்கும் கோட்டா ஸ்ரீநிவாச ராவிற்கும் உள்ள காட்சிகள் சிறப்பானதாக இருக்கும். இப்படிபட்ட கதையில் என்னை இடம்பெறச் செய்த செல்வராகவனுக்கு நன்றி. உடன் நடித்த த்ரிஷா மற்றும் இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்தார்.

Selvaraghavan

அதற்கு பதிலளித்துள்ள இயக்குனர் செல்வராகவன், நன்றி சார். எனக்கு தான் மகிழ்ச்சி. நீங்களும் த்ரிஷாவும் நான் பேப்பரில் எழுதியவற்றிற்கு உயிர் கொடுத்திருந்தீர்கள் என்றார். தமிழிலும் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் மற்றும் நயன்தாரா நடிக்க, யாரடி நீ மோகினி என்ற பெயரில் ரீமேக்காகி வெற்றி பெற்றது.