தனுஷ்,சாய் பல்லவி நடிப்பில் வெளியான ரவுடி பேபி பாடல் ரசிகர்களிடையே வைரல் ஹிட் ஆனது.பாடல் ரிலீஸ் முதல் வீடியோ ரிலீஸ் வரை எல்லாமே சாதனை தான்.யுவனின் துள்ளலான இசையில் உருவான இந்த பாடல் யூடூப்பில் வேற லெவல் ரீச்சை பெற்றது.தனுஷின் catchy-ஆன வரிகளும் பாடலுக்கு பக்க பலமாக அமைந்தது.

ஆடியோ ரிலீஸின் போதே tiktok-ல் பலரால் பதிவு செய்யப்பட்ட பாடல் என்ற சாதனையையும் படைத்தது.அடுத்ததாக youtube-ல் வீடியோ வந்தவுடன் பல சாதனைகளை படைத்தது.பிரபுதேவாவின் அசத்தலான steps-க்கு தனுஷ்,சாய் பல்லவி இருவரும் அசத்தலாக நடனமாட views எகிறியது.

தமிழ் மட்டுமின்றி தென்னிந்தியாவின் அதிவேக 100,200,500 மில்லியன் என அடித்து நொறுக்கிய ரௌடி பேபி.தென்னிந்தியாவின் 1 பில்லியன் பார்வையாளர்களை பெற்று அதிகமாக பார்க்கப்பட்ட வீடியோ என்ற பெரிய சாதனையை படைத்தது.

தற்போது 5 மில்லியன் லைக்குகளை பெற்று இந்த சாதனையை செய்யும் அதிவேகமான மற்றும் முதல் தென்னிந்திய வீடியோ என்ற பெருமையை பெற்றுள்ளது ரௌடி பேபி.இந்த பாடல் படைத்த சாதனையை ரசிகர்கள் கோலாகலமாக ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.