தமிழ் சினிமாவின் சீரியல் நடிகைகளில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருப்பவர் க்ரித்திகா.பல சூப்பர்ஹிட் தொடர்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக உருவெடுத்துள்ளார் க்ரித்திகா.தொடர்களில் மட்டும் இல்லாமல் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அசத்தியுள்ளார் க்ரித்திகா.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று பூவே பூச்சூடவா.கார்த்திக் வாசுதேவன் இந்த தொடரின் ஹீரோவாக நடிக்கிறார்,ரேஷ்மா முரளிதரன் இந்த தொடரின் நாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.மதன் பாண்டியன்,க்ரித்திகா,மீனா குமாரி,உமா பத்மநாபன்,யுவராணி,தனலட்சுமி,ரவீனா,திவாகர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த தொடர் 1000 எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடராக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார் க்ரித்திகா.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் தனது புகைப்படங்கள்,வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து வருவார் க்ரித்திகா.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் தான் எப்படி குண்டாக இருந்தேன் என்பதையும் எப்படி ஸ்லிம் ஆனேன் என்பதையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் க்ரித்திகா.இவரது ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Krithikaa Laddu ☺ (@krithikaaladdu)