பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மணிவண்ணனின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைக் குறிவைத்து ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ படம் எடுத்து மிரட்டி பணம் பறிந்து வந்துள்ளது. இதில், பாதிக்கப்பட்ட ஒரு மாணவி அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர்.

manivannan

இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த வழக்கில் மணி என்ற மணிவண்ணனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து, தனக்கு ஜாமீன் வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த மனுவை, கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத்தொடர்ந்து, ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

manivannan

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மணிக்கு ஜாமீன் வழங்க மறுத்து, அவரது மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

manivannan

இதனிடையே, மணியின் ஜாமீன் மனுவைக் கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.