பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தில் தனுஷுடன் இணைகிறார்.2016-லேயே தொடங்க வேண்டிய இந்த படம் சில காரணங்களால் தள்ளி போனது.Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

Dhanush karthik Subburaj

மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடிக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்ககிறார்,இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெறும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

Dhanush karthik Subburaj

தற்போது இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.டிராய்,ஒண்டர் உமன் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் ரசிகர்களிடையே பிரபலமான கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரிலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush karthik Subburaj