அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான படம் ஓ மை கடவுளே. பிரபல தொலைக்காட்சி நடிகை வாணி போஜனும் நடித்திருந்தார். அக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி இப்படத்தை தயாரித்தது. சமீபத்தில் வெளியான இப்படம் சக்கை போடு போட்டது. 

Ashokselvan

படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் இளைஞர்கள் விரும்பும் வகையில் இடம்பெற்றது. லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். விது அய்யனா ஒளிப்பதிவு செய்தார். இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 

ritikasingh

இந்த படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை ஏ.பி.இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியது. தற்போது படத்தின் ஜுக் பாக்ஸ் வெளியானது.