வெங்கட் பிரபு மற்றும் STR இணையும் திரைப்படம் மாநாடு. இப்படத்திற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. எப்போதும் தனது எதார்தமான கருத்தை மைய்யமாக வைத்து படம் இயக்கி வரும் வெங்கட் பிரபு, இப்படத்தில் அரசியல் கலந்த கமர்ஷியல் கருத்தை கதையில் வைத்து எடுக்கவுள்ளார். 

venkatprabhu

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 

kalyani

அப்துல் காலிக்காக STR நடிக்கிறார். படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. ஹைதராபாத்தில் நடக்கவிருந்த படப்பிடிப்பை தற்போது சென்னையிலேயே நடத்த திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். VGP கோல்டன் கடற்கரையில் செட் அமைக்கப்பட்டிருப்பதாகவும், 9 நாட்கள் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடைபெறலாம் என்று நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தகவல் வெளியானது.