லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். ஏப்ரல் மாதம் 9-ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் விநியோக உரிமையை செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோ கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

master

படத்தின் முதல் சிங்கிளான ஒரு குட்டி கதை பாடல் வெளியாகி ட்ரெண்டானது. அருண் ராஜா எழுதிய இப்பாடல் வரிகளுக்கு விஜய் குரல் தந்துள்ளார். இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 129 நாட்கள் கொண்ட ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது. 

master

படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தை அமெரிக்காவில் திரையிடும் உரிமையை ஹம்ஸினி என்டர்டெயின்மென்ட் மற்றும் திங்க் பிக் பிக்சர் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலருக்காக மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் தளபதி ரசிகர்கள்.