உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.

Bigil Producer Donates 15 Lakhs to FEFSI Workers

கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ் படங்கள்,சீரியல்கள்,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்த இக்கட்டான நிலையில் FEFSI தொழிலாளர்களுக்கு உதவுமாறு அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி திருத்துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

Bigil Producer Donates 15 Lakhs to FEFSI Workers

இந்த கோரிக்கையை ஏற்று பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை செய்துள்ளனர்.இதனை தொடர்ந்து தற்போது ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக 15 லட்ச ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.